Popular Posts

Saturday, November 12, 2011

கல்யாணம் என்றால் ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள்?

ஆண்களிடம் பெற்றோர்கள் தம்பி கலியாணம் பேசட்டாப்பா உனக்கு என்று கேட்டால் ஜயோ எனக்கு இப்ப வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடுகின்றார்கள். அப்படி இவர்கள் கலியாணத்துக்கு பின்தங்குவதற்கான காரணம் மற்றும் கல்யாணம் செய்வதால் என்ன இருக்கு என்பது பற்றி பார்ப்போம்.

கசப்பான அனுபவங்கள்: ஏற்கனவே திருமணம் ஆகியிருப்பவர்களுக்கு அந்தக் கலியாணம் பிரிவில் முடிந்திருந்தால் மறுபடியும் திருமணம் செய்துகொள்ள தயங்குவார்கள். அதேபோலவே காதல் தோல்வி ஏற்பட்டிருந்தால் இனி என்னத்த கல்யாணம் செய்ய என்று ஆண்கள் விரக்தி அடைவார்கள்.

சுதந்திரம்: திருமணம் ஆகாத ஆண்கள் நினைத்தபடி சந்தேசமாக இருக்கலாம், நினைத்த போதெல்லாம் நண்பர்களுடன் ஊர் சுற்றலாம், திருமணம் செய்தால் கால் கட்டு என்று நினைக்கிறார்கள்.
அதுக்கு காரணம் பெண்கள் ஆண்களை கலியாணம் செய்தவுடனே சொல்வார்கள் என்ன எப்ப பார்த்தாலும் நண்பர்கள், நண்பர்கள்னு போறீங்கள் உங்களுக்கு நான் முக்கியமா, இல்லை உங்கள் நண்பர்கள் முக்கியமா என்று மனைவி கேட்பாள் அல்லவா அதுக்கு தான் ரொம்பப் பயப்பிடுகின்றார்கள் ஆண்கள்.

பொறுப்பு: திருமணம் முடிந்து மனைவி வந்துவிட்டால் கூடவே ஆண்களுக்கு பொறுப்பும் வந்துவிடும். வீடு, மனைவி, பிள்ளைகள் என்று பொறுப்பாக இருக்க வேண்டும். குடும்பச் செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் ஆண்கள் பயப்படுகிறார்கள்.
திருமணத்திற்கு முன்பு நல்லபடியாக சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் தான் மனைவி வரும் போது எப்படி சமாளிக்க முடியும் என்று பயப்பிடுகின்றார்கள் ஆண்கள்.
திருமணம் செய்துகொள்ள பயப்படாதீர்கள். இவள் எனக்கு ஏற்ற துணை என்று யாரை நினைக்கிறீர்களோ அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள். விட்டுக் கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தால் இல்லறம் என்றுமே இனிமையாக இருக்கும்.
திருமணம் செய்து கொள்வதை நினைத்து பயப்படாமல் வருகிறவளுடன் வாழ்க்கையை எப்படி இனிமையாக வாழ்வது என்று சிந்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

No comments:

Post a Comment