Popular Posts

Saturday, November 26, 2011

Einstein இன் கொள்கையில் மீண்டும் பிழையா ?

Albert Einstein இன் 106 வருடப் பழமையான கொள்கைப்படி, ஒளியில் எந்தவொரு அடர்த்தியும் இல்லாததால் ஒரு வெற்றிடத்திற்குள் ஒளியைத் தவிர வேறெந்தவொரு பொருளாலும் வேகமாகப் பயணிக்கமுடியாதென்று கூறப்பட்டது.
ஆனால் இதற்கு மாறாக, மிகவும் சிறியளவு அடர்த்தியைக் கொண்ட ‘neutrinos’ எனப்படும் அணு மூலக்கூறினால் எந்தவொரு ஊடகத்தினூடும் வேகமாகப் பயணிக்க முடியுமென விஞ்ஞானிகளால் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் வேகமானது விஞ்ஞானக் கதைகளில் வருவதுபோன்ற சில விடயங்களை உண்மையானதாக மாற்றக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கலாமென்கின்றனர் விஞ்ஞானிகள்.
சுவிசின் பாரிய அணு உலையான Cern இனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 450 மைல்கள் தொலைவிலிருந்த இத்தாலிய அல்ப்ஸ் மலையிலுள்ள கிரான் சாசோ ஆய்வுகூடம் ஒன்றிற்கு துணை அணுத்துகள் ‘neutrinos’ கற்றையொன்றை அனுப்பினர்.
இந்த neutrinos, ஒளியை விடவும் 60 நனோசெக்கன்கள் முன்பாக இத்தாலியை வந்தடைந்திருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். இதுதான் ஒளியினைவிடவும் இன்னொரு பொருளினால் வேகமாகச் செல்லமுடியுமென்பதைக் கூறியது.
Einstein பிழையாக நிரூபித்துள்ளாரென ஓர் ஆய்வாளர் குழுவொன்று அறிவித்தபோது அவர்களாற்கூட அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.
இதனால் அந்தப் பரிசோதனையை 20 தடவைகளுக்கும் மேல் மீண்டும் மீண்டும் மேற்கொண்டபோதும் ஒரே விளைவுகளையே இவர்கள் பெற்றனர்.

No comments:

Post a Comment