Popular Posts

Friday, March 9, 2012

ஆசியாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்

உலகப் பொருளாதார அமைப்பினால் 2011 ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட ஆண் – பெண் வேறுபாடு தொடர்பான அறிக்கையில், சமூகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கு அமைய ஆசியாவில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
உலகிலுள்ள அனைத்து நாடுகளும் உள்ளடங்கும் வகையில் ஹாவார்ட் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் டொக்டர் கபில ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அரசியல், பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய நான்கு துறைகளில் பெண்களுக்கு சமூகத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் தொடர்பில் கண்காணிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆசியாவிலேயெ இலங்கைக்கு 31 ஆவது இடம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு 113 ஆவது இடமும், சீனாவுக்கு 61ஆவது இடமும் கிடைத்துள்ளன.
இந்த ஆய்வறிக்கையின் படி, ஐஸ்லாந்து முதலாவது இடத்திலும், நோர்வே இரண்டாவது இடத்திலும், பின்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment